அக்கறைக்கும்
அதிகப் பிரசங்கித்தனத்திற்கும்
வித்தியாசம் தெரியாத நபர்கள்
வாழும் இந்த ஊரில்...
என் வாழ்க்கையின் மீது
எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்விக்கும்
அத்துமீறலுக்கும் அறையவா முடியும்?
சிரித்தபடி சொல்கிறேன்
உங்கள் அக்கறைக்கு நன்றி!
-மகி