Saturday, 4 November 2017

சென்னையில் மழை


மேகத்தோடு பகைத்துக்கொண்டு
சென்னைக்கு வந்த மழை
தனது நண்பனான ஏரியை
எதிர்பார்து தெருத்தெருவாய் அலைகிறது!
கட்டி அணைக்கும் நண்பனுக்கு பதிலாக
கண்ட இடமெல்லாம்
கட்டிடங்களை    கண்டதால்
பாசத்தால் ஏங்குகிறது
அங்கேயே தேங்குகிறது!

                                    -மகி

Friday, 3 November 2017

மழை

மண்ணை முத்தமிட
பூமிக்கு வந்தேன்...
என்னை முத்தமிட்டது
தார் சாலையும் கான்கிரீட் பலகைகளுமே...
                   -இருதயா

Wednesday, 1 November 2017

இனயம்

இணையத்தில் நேரம் செலவிடும் நமக்கு
இனயம் பற்றித் தெரிய
வாய்ப்பில்லை...
இனயம்- குமரி மாவட்டத்தின்
கடற்கரை கிராமம்
நம் மீனவ நண்பர்களின் வாழ்விடம்
இதை அழிக்கக் கொண்டுவந்தார்கள்
ஓர் திட்டம்...
யார் யாரோ
பெட்டி பெட்டியாய் பணம் சம்பாதிக்க
பெட்டக துறைமுகத்தை
கொண்டுவந்தார்கள்
இதன் வீரியம் யாருக்கும்
தெரியப்போவதும் இல்லை!
தெரியவிடப்போவதும் இல்லை!
நீங்கள் ருசியாக உண்ண
எங்கள் உயிரை பணையம்
வைத்தோம்
உயிரையும் இழந்தோம்!
அப்போதும் நீங்கள்
வேடிக்கை பார்த்தீர்கள்
இது வேடிக்கை பார்க்கும்
விஷயம் அல்ல
மூடர்களே!
வெட்கப்பட வேண்டிய விஷயம்!
எல்லை தாண்டினோம் என்று
கொன்றார்கள்
தற்போது சொந்த மண்ணையும்
தாரைவார்க்க சொல்கிறார்கள்!
இது என்ன நியாயம்?
ஒன்று மட்டும் சொல்கிறேன்
மீன்வலைகளை பிடித்த
எமது கரங்களால்
உங்களின் குரல்வளையைப்
பிடிக்க வைக்காதீர்!

                             -மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...