மீன் குழம்பு

அத்தை வைத்த மீன் குழம்புக்கு
அவ்வளவு கிராக்கி!
அதை நினைத்தாலே
தீரா சுனையாக
என் நாவூறுகிறதே!
அதை தட்டில் வைத்து
சோற்றோடு சேர்ந்து பிசைகையில்
பல கைகள் வந்து சேரும்
அதை பங்கு போட!
முந்துவோருக்கு மீனும்
பிந்துவோருக்கு முள்ளும் ஆதலால்
சில சமயம்
நாகரீக நாய்களாவோம்!
உண்மையில் அவ்வளவு கிராக்கி தான்
அந்த மீன் குழம்பிற்கு!
  
                                      -மகி

Comments

  1. குமரி மக்களுக்கு இது அத்தனை பரிச்சயம்.. .. அருமை

    ReplyDelete

Post a Comment

Popular Posts