காட்சிகள் கரைந்தோட
அவள் மட்டும்
அவன் கருவிழியில்
உறைந்து விட்டாள்!
புரண்டு புரண்டு
படுத்தான் வரவில்லை!
புருவம் நெறித்து
படுத்தான் வரவில்லை!
வராத தூக்கத்தை
வம்பாய் அழைக்கிறான்
வருவதெல்லாம் அவள் முகம் மட்டுமே!
-மகி
உருளைக்குடி, ஊத்தக்குடி, மன்னார்குடி, புளியங்குடி இப்படியான பல குடிகளுள்
ஏதொ ஒரு குடியில் பிறந்து வளர்ந்த software engineer மனோ என்கிற முனியாண்டிக்கு போன்கால்
"டேய்ய்............ முனியாண்டி?"
"யாரு....?"
"நான் தான் டா, இராமசாமி....பள்ளிக்கூடத்தில ஒன்னா படிச்சோமே?"
"ஆஹ்ன்........நியாபகம் இருக்கு..எப்படி இருக்க.....ஆமா.....இந்த நம்பர் எப்படி கிடச்சது ?.....என்ன....திடீர்னு போன்பன்னி இருக்க??????
கேள்விகளில் புதைந்து இருக்கும் ஆழமான பதில்களை எண்ணிக்கொண்ட இராமசாமி சொல்ல வந்த செய்தியை தோழமையுடன் விரைந்து சொன்னான்
" இல்ல டா......நம்ம மேரி டீச்சர் நாபகம் இருக்கா......"
" அஹ்ன்...நமக்கு alphabet சொல்லி கொடுத்தாங்களே...."
நியாபகம் இல்லை என்று சொல்லி இருந்தால் இராமசாமியின் கோபம் வெளிப்பட்டு இருக்கும்
" ஆமா....ரெண்டாங் கிலாசுல எ பி சி டி சொல்லிக் கொடுதங்கல... அவங்க தவறிட்டாங்க...........அவங்க ஈம காரியத்துக்கு வருவியா........."
நீண்ட மௌனத்திற்க்கு பிறகு "ம்ம்...வர பாக்குரென் டா"....
போன்கால் துண்டிக்கப்பட்டதும் தன்னுள் தொலைந்த ரசனைகள் மீண்டும் துளிர் விடக் கண்டான்........ மேரி டீச்சருடன் கடந்து சென்ற பள்ளி பருவ நினைவுகளை அடுத்தடுத்த slideகளாக ஓட்டிப்பார்த்தான்....... கடையில் பஞ்சுமிட்டாய் திருடி மேரி டீச்சரிடம் பிடிபட்டதும் ஓ...என்று ஒப்பாரி வைக்கும்போது "அம்மாகிட்ட சொல்ல மாட்டேன், பயப்படாத.." என்ற அவளின் இனிய குரல் மனோ என்ற முனியாண்டிக்கு நெருக்கமான குரல், அப்பொழுதெல்லாம் மேரி டீச்சர்க்கு குடும்பத்தினரை காட்டிலும் மிக நெருக்கமானவர்கள் மாணவர்களே, விலைமதிப்பற்ற பாசம் மேரி டீச்சர்க்கும் மாணவர்களுக்கும் இடையே விளைந்து கிடந்தது.....
மனோ என்கின்ற முனியாண்டிக்கு மீண்டும் ஒரு போன்கால்
" சொல்லு சுஜி"
" அஹ..மனோ நம்ம பையனுக்கு Tution வேனும்னு சொல்லி இருந்தேன்ல
மடிப்பாக்கம் பக்கத்துல பாத்து இருக்கேன் அட்ரஸ் வாட்ஸ அப்ல செண்ட் பண்ணி இருகேன் பருங்க.... நல்லா தான் இருக்கு பீஸ் கட்டிட்டேன் ஓகேவா மனோ"
"ம்ம்"
"சரி..பிசிய இருப்பிங்க.... I'call you later...bye...."
"BE THE CHANGE
Tutions for: pre-kg to III rd std
Senthamilnagar,
Madipakkam,chennai
For contact: 925******89"
என்ற புலனத்தில் பகிர்ந்த செயிதியைக்கண்டு கண் மூடி இந்த வணிக உலகில் தன் மகனுக்கான மேரி டீச்சர் யாராக இருக்க முடியும் என்று யோசித்தான் மனோ என்கின்ற முனியாண்டி...................
-அகல்
இரவு வீட்டுக்கு வந்தவுடன், அப்பாவிடம் தோசை சுட்டு கொடுத்துக் கொண்டே அம்மாவின் அன்றைய complaint "அந்த பையன் சும்மாவே இருக்கறது இல்ல......எப்பவும் அவள அடுச்சுகிட்டே இருக்கான்"
இறுமாப்பாக மீசையில் ஒட்டிக் கொண்டு இருந்த சட்டினியை துடைத்த பின் அப்பாவின் குரல் "என்ன..அண்ணா அடிச்சானா.."
"இல்லப்பா விளையாடிட்டு இருந்தோம்" என்ற ஆசை மகளின் இனிய குரலை காதில் வாங்கிக் கொண்டே புன்முறுவலுடன் அடுத்த தோசை சுட்டாள் அம்மா...
-அகல்
அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம் கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...