மன்னிக்கவும்!
என்னை இரக்கம் இல்லாதவன்
என்று கூப்பிடும் முன்
இதை நினைவில் கொள்ளுங்கள்!
உங்களிடம் அன்பின் மலரை நீட்டவோ
புன்னகை பூக்கவோ
என்னிடம் அன்பு கையிருப்பில்
இல்லை!
என்னிடம் அன்பைக் கடன் வாங்கியவர்களும்,
களவாடியவர்களும்,
தயக்கம் காட்டுகிறார்கள்!
அதனால் என்னிடம் எதையும் எதிர்ப்பாக்காதீர்கள் !
என் முகம் மலரவில்லை எனில்
நினைத்துக் கொள்ளுங்கள்
இன்று இந்த செடிக்கு
யாரும் அன்பை ஊற்றவில்லை என்று...
- மகி
No comments:
Post a Comment