கண்ணீர் கரையில்

ஓ கடல் மாதா...
படகுகள் மிதப்பது தண்ணீரில் அல்ல
என் கண்ணீரில்!
கரையில் ஒலிப்பது அலைகளின் சத்தம் அல்ல
என் அழுகுரலின் சத்தம்!
காய்வது கருவாடு அல்ல
நானும் என் மனமுமே!
கலங்கரை விளக்கம் போல காத்திருக்கிறேன்
என் சொந்தங்களை எதிர்பார்த்து
அன்னை (கடல்) என்று தானே
உன்னிடம் அவர்களை அனுப்பிவைத்தேன்!
ஆனால் நீயோ
என்னை அழவைக்கிறாய்!
ஓ அலைகளே...
அழையா விருந்தாளியாக வந்து
எங்களை அழித்துவிட்டாய்!
கடலில் கொல்லப்படுவது
எங்களுக்கு புதிதல்ல
ஆனால் கடலே காலனாக
மாறினால் நாங்கள் என்ன செய்வோம்!

                                     - மகி

Comments

Post a Comment

Popular Posts