Friday, 1 December 2017

அம்மா


இலக்கணம் தெரியாது அவளுக்கு 
இருந்தும்
ஆனா ஆவன்னா சொல்லித்தர 
அவள் மறந்ததில்லை!
கணக்கு தெரியாது
இருந்தும்
தினமும் கூட்டிப் பெறுக்க
அவள் மறுத்ததில்லை!
வரலாறும் தெரியாது
இருந்தும்
ராஜாக்களின் கதையை சொல்ல
அவள் தவறியதில்லை!
மருத்துவம் படிக்கவில்லை தான்
இருந்தும்
அவளின் மிளகு ரசத்திற்கு 
பயக்காத நோய் இல்லை!
மனோதத்துவம் படித்ததில்லை
இருந்தும்
தன் பிள்ளையின் மனதை படிக்க 
அவளைப் போல ஆளில்லை!
தெரியாமலே இவ்வளவு செய்யும்
அவளின் அருமை மட்டும்
நமக்கு தெரிவதே இல்லை!

                                  -மகி

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...