காலப்பயணி

தொடர்வண்டிப் பயணம்.
கவிஞனின் வரம்.
கவிதைகள் பல உண்டு.
இருந்தும் கைகள் பரபரக்கும்...

தாயை தேடும் பிள்ளையென
மழலையைத் தேடும் மனம்,
ஜன்னலோர இருக்கையை கண்டவுடன்...

காதலியின் கூந்தல் காற்றில் சுகிக்கும்
ஒருதலை காதலனென
லயிக்கும் மனம்
கம்பிகளினூடே தலை சாய்க்கும் போது... 

விடலை முடிந்தும் மழலையாக்கும்.
நரை துளிர்த்தும் முதற்காதலை எண்ணி ஏங்கும்..
அறிவியல் இல்லா காலப்பயணி..
                                                  -எழில்

Comments

  1. எளிய வார்த்தைகள் பயன்படுத்தினால் எழிலின் கவிதை இன்னும் எழிலாகும்

    ReplyDelete

Post a Comment

Popular Posts