Friday, 4 September 2020

இசை நீயின்றி!

விடியாத இரவுகள் பல..
விடிந்தது உன்னால்..
அழியாத காயங்கள் பல..
மறப்பது உன்னால்..
கழியாத நேரங்கள் பல..
விரைவது உன்னால்..
முடியாத பயணங்கள் பல..
பயணிப்பது உன்னால்..

நாத்திகனுக்கு கடவுள் இல்லை..
பக்தி உன்னில்..
உழைப்பாளிக்கு உறக்கம் இல்லை..
ஓய்வு உன்னில்..

நான் பிழைப்பேனோ..
இசை நீயின்றி...

                                 -எழில்

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. என் காதலைக் காதலிக்கிறீர்கள். பரவாயில்லை. நேசத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன் எழில். எனினும் அதை நீங்கள் கவியாக்கியத்தில் சற்று பொறாமைதான். மன்னிக்கிறேன்.
    P.S: 'விடிந்தது உன்னால்' என்று வருமென்று நினைக்கிறேன்.

    ReplyDelete

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...