மீண்டும் ஒரு நீளமான இரவு!
துணைக்கு ராஜாவும் இல்லை!
அன்பு ரகுமானும் இல்லை!
இவர்கள் புது இசையமைப்பாளர்கள்!
"டடக் டடக்" என்ற ஸ்ருதியில் பாடும்
ஓட முடியாத ஃபேன்!
காதோரம் வைலின் கச்சேரி
நடத்தும் கொசுக்கள்!
இவர்களுக்கு கோர்ஸ்
பாடும் தெரு நாய்கள்!
இசைக்கு ஏற்றது போல
கடந்த கால நினைவுகளை
ரீ ரெக்கார்டிங் செய்ய
ரீவைண்ட் பட்டனை தொட்டாள்
மனதில்!
-மகி
No comments:
Post a Comment