கடந்து போவதைப் பற்றி
என் நண்பர்கள் எனக்குப்
பாடம் எடுப்பது வழக்கம்!
அவளும் தான்!
இன்று ஒரு அடி முன்னேறி
என்னைப் பார்த்தும் பார்க்காதது போல
கடந்து செல்கிறாள்!
நான் யாரோ போல!
நானாவது போய் பேசியிருக்கலாமே
என்று என்னைக் கேட்காதீர்கள்!
நான் யாரோ போல
கடந்து சென்ற அவள்
நான் யார் என்று கேட்டுவிட்டால்
நான் நானாக இருப்பேனா?
நான் தான் இருப்பேனா?
-மகி
No comments:
Post a Comment